விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் சென்ற பேருந்தில் பயணம் செய்த 20 வயது கல்லூரி மாணவிக்கு நடத்துனர் சிலம்பரசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய சூழலை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டாலும், இதுபோன்ற குற்றங்கள் சமீப காலமாக செய்திகளில் வருவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் சென்ற பேருந்தில் பயணம் செய்த 20 வயது கல்லூரி மாணவிக்கு நடத்துனர் சிலம்பரசன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால், தனியாக அமர்ந்திருந்த போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியின் புகாரின் அடிப்படையில், நடத்துனர் சிலம்பரசனை, கானை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.