பார்சிலோனா நகரின் பிரபல கட்டடத்தின் முன்பு 2 சேர்கள், பக்கத்தில் ஒரு போர்டு “Free Conversations” (உரையாடல்கள் இலவசம்!), ஸ்பானிஷ், ஆங்கிலம், காடலான் மொழிகளில் யார் வேண்டுமானாலும் உரையாடலாம். இது தான் வாடிக்கை 26 வயதே ஆன அட்ரியா பலஸ்தர் (Adria Ballestar) என்ற இளைஞருக்கு.
சிறிது நேரம் நன்றாக உரையாடலாம் என்பதே இதன் நோக்கம் என்று விளக்கம் அளிக்கிறார். இக்காலத்தில், நாடு விட்டு நாடு கூட சுலபமாக செய்திகள் பகிர்ந்து விடலாம். ஆனாலும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு வணக்கம் சொல்வதில்லை என்று கூறுகிறார். தனது சமூக வலை தளங்களில் அவரது உரையாடல்களைப் பகிர்ந்து வருகிறார்.
அவ்வப்போது மன நல நிபுணராக உணர முடிகிறது. ஒரு சிலர், நல்ல நேர்மறையான செய்திகள் பகிர்கிறார்கள். ஒரு சிலர் தங்களுக்குள் இருக்கும் சோகத்தைப் பகிர்கிறார்கள். எல்லாமே இருக்கிறது என்று கூறுகிறார் பலஸ்தர்.
கோவிட் காலத்தில் இந்த திட்டத்தை randompenpals.com என்ற இணையதளம் மூலம் தொடர்ந்தார். 10 நொடிகளில் ஒரு நண்பர் என்ற நோக்கோடு செயல் படுகிறது இந்த இணையதளம்.
இவரை இணையத்தில் சந்திக்க பேஸ் புக் Free Conversations Movement என்ற பக்கத்தில், இன்ஸ்டாகிராம் -ல் @FreeConversations என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.