ஆந்திராவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள் பட 1,491 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,கல்வி நிறுவனங்களில் உள்ள 5,12,800 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சோதனை செய்யப்பட்டதில் 1,491 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் நேர்மறை விகிதம் 0.3 சதவீதம் மட்டுமே என தெரிவித்துள்ளனர். கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது மாநில நிலைகளுக்கேற்ப தளர்வுகளுடன் பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்டு வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் நவம்பர் 2ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றது மேலும் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.