சென்னை அண்ணா நகர் தொகுதி தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர் மோகனுக்கு, பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற சூழ்நிலையில், மக்களுக்காக பணியாற்றி வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரையில், 30-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது ஒரு தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகர் தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் மோகனுக்கு, கொரோனா தொற்று இருப்பது, பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்சி உறுப்பினர்களும், தொண்டர்களும் அவர் சீக்கிரம் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.




