ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் தயாரிக்கப்பட்ட கோவி ஷீல்டு தடுப்பு மருந்து தமிழகம் வந்தடைந்தது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் கட்டமாக தலா 150 பேருக்கு இந்த தடுப்பு மருந்து கொடுக்கப்படவிருக்கிறது. வரும் 10ம் தேதிக்குள் முதல் டோஸ் வழங்கப்படும் என தகவல் கிடைத்துள்ளது.
அடுத்த ஒரு மாதத்திற்குள் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்றும் தடுப்பு மருந்து போடப்படுபவர்கள் ஆறு மாதங்களுக்கு தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள் எனவும் தடுப்பு மருந்தினால் பாதிப்பு ஏற்படுகிறதா என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், தடுப்பு மருந்தினால் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதா என தனியார் மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியானது 18 வயதுக்கு மேற்பட்ட , கொரோனா நோய் தாக்காத, எதிர்ப்பு சக்தி ஏற்கெனவே உருவாகாத நபர்களுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.




