தீபாவளி பண்டிக்கு பிறகு சற்றே அதிகரிக்கும் கொரோனா பரவல் – மத்திய சுகாதார அமைச்சகம் வெளிட்ட பாதிப்பு நிலவரத்தில் தகவல்.
டெல்லி, நாடு முழுவதும் வெகுவாக குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் சற்று அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. மத்திய அரசின் இன்றைய புள்ளி விவரங்கள் படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,451 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை என்பது 3,43,66,987 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,204 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,37,63,104 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில் இன்று மட்டும் 266 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 4,61,057 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் மட்டும் தற்பொழுது 1,42,826 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 262 நாட்களில் குறைந்த எண்ணிக்கை ஆகும். மேலும் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.24 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.34 ஆகவும் உள்ளது.
நேற்று மட்டும் ஒரே நாளில் 23,84,096 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தமாக 108,47,23,042 டோஸ்கள் இந்தியாவில் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை காரணமாக பலர் வெளியூர் பயணம் மேற்கொண்டதும் அதற்காக எடுக்கப்பட்ட பரிசோதனை காரணமாக திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.