கொரோனா தொற்றில் இருந்து மீண்ட தமிழக தீயணைப்பு வீரர்கள் 29 பேர் தங்களது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை அமைச்சர் முன்னிலையில் தானம் செய்தனர்.

சென்னை:
தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிளாஸ்மா வாங்கி செயல்பட்டு வருகிறது.கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பலர் தானாக முன்வந்து தங்கள் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை இந்த வங்கியில் தானம் செய்கின்றனர்.இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட தமிழக தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அதில் 29 தமிழக தீயணைப்பு வீரர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் தீயணைப்பு துறை இயக்குனர் டி.ஜி.பி.சைலேந்திரபாபு ஆகியோர் முன்னிலையில் தங்களது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்தனர்.இதை தொடர்ந்து அந்த தீயணைப்பு வீரர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பாராட்டி,அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கினார்.அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,போலீசாரை தொடர்ந்து தீயணைப்பு வீரர்களும் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.இதுவரை 140 நபர்களிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெற்று அதை 225 நபர்களும் பிளாஸ்மா தானமாக வழங்கப்பட்டுள்ளது.மேலும் இதை தொடர்ந்து தமிழகத்தில் மதுரை,தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பிளாஸ்மா வங்கி அமைக்கும் பணி அதிதீவிரமாக நடைபெற்றுவருகிறது என்று கூறினார் .
இந்த பிளாஸ்மா தானத்தின் பொழுது தீயணைப்பு துறை வடமண்டல இணை இயக்குனர் என்.பிரியா ரவிச்சந்திரன் ,ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் தேரணி ராஜன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




