அமெரிக்காவில் எலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை சுற்றி திரியும் 79 எலிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 16 எலிகளுக்கு ஆல்ஃபா, டெல்டா, ஒமைக்ரான் ஆகிய உருமாறிய கொரோனா தொற்றுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எலிகள் போல் மற்ற விலங்குகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாமா என சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.