டெல்லியில் கூரியரில் மூலம் வந்த 48 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோவிற்கும் அதிகமான ஹெராயின் என்ற போதைப்பொருளை, போதை பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு பறிமுதல் செய்ததுள்ளது
கொரோனா ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் முடங்கிப்போய் உள்ளது, சர்வதேச பயணிகள் விமான சேவை இல்லாத நிலையில், சரக்கு விமானங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றது. இதனை பயன்படுத்திக்கொண்டு வெளிநாடுகளில் இருந்து கூரியர் வாயிலாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவது மிகவும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் கூரியரில் மூலம் வந்த 48 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோவிற்கும் அதிகமான ஹெராயின் என்ற போதைப்பொருளை, போதை பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு பறிமுதல் செய்ததுள்ளது. கடத்தல்காரர்களை பிடிக்க போலி பார்சல் தயார் செய்த போலீசார், சம்பந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பினர்.
இதனை யடுத்து, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர், மியான்மர் பெண் ஒருவர் உள்பட 7 பேரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களிடம் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.