தினமும் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது. அது உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது மட்டுமல்ல அதிலும் சில உடல் நல ஆரோக்கியங்களும் அடங்கியுள்ளன. அந்தவகையில் நீங்கள் தினம் குளிக்கும் தண்ணீரில் உப்பு கலந்து குளித்தால் நன்மைகள் பல கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். அவை என்னென்ன என்பதை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
Bath Salt இவை குளிப்பதற்கு என பிரத்யேகமாக உள்ள உப்பு. இந்த உப்பை நீங்கள் குளிக்கும் தண்ணீரில் அளவுக்கு ஏற்ப 3 முதல் 10 கப் வரை சேர்க்கலாம் என்று கூறப்படுகிறது. சாதாரண நீர்த்தொட்டி அளவில் 1/4 கப் கடல் உப்பு சேர்க்கலாம் என ஹெல்த் லைன் இணையதளம் கூறுகிறது.அந்த தண்ணீரானது உங்கள் உடலின் வெப்பநிலையிலிருந்து 2 டிகிரி கூடுதலான வெப்பநிலையில் இருக்க வேண்டும். குறைந்தது அந்த உப்பு 15 – 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
இவ்வாறு குளிப்பதால் உடல் தசைகள் இலகுவாகி உடலுக்கு ரிலாக்ஷேசன் கிடைக்கிறது. உடல் வலி , தசை வலி இருந்தாலும் உடல் அவற்றில் இருந்து நிம்மதி பெறும். ஹெவி ஒர்க் அவுட், கடின உழைப்பு, உடல் அசதி போன்ற நேரத்தில் இந்த கடல் உப்பு குளியல் நல்ல பலன் தரும் என்று ஹெல்த் லைன் இணையதளம் கூறுகிறது.அதுமட்டுமன்றி சருமத்திற்கும் நல்ல ஆரோக்கியம் , ஹெல்தியான சருமத்தைப் பெறலாம். அதோடு இரத்த ஓட்டம் சீராவதால் சருமம் பொலிவாக மாறுவதையும் உணர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடல் உப்பு குளியல் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கலாம். சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்ற ஏதேனும் மாற்றம் தெரிந்தால் இந்த குளியலை தவிர்ப்பது நல்லது. இந்த குளியலை நீங்கள் பின்பற்றலாமா என வல்லுநர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. அதேபோல் உடலில் காயம், சிரங்கு, பரு , தேம்மல் போன்ற சரும பாதிப்புகள் இருந்தாலும் இவற்றை தவிர்க்க வேண்டும்.