திருவள்ளூரில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கனமழையால் சேதம் அடைந்துள்ளது.
நிவர் புயல் காரணமாக பல்வேறு தாழ்வான இடங்கள் தண்ணீரால் மூழ்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. இன்று அதிகாலை 5 மணி அளவில் புயல் புதுச்சேரி வழியாக கரையை கடந்தது. தற்போது கடலில் இருந்து 109 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 5000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. குறிப்பாக திருவாலங்காடு அடுத்த பதினோரு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேம்பட்ட விவசாய நிலங்கள் பயிரடப்பட்டுள்ளது. மேலும் இந்த விவசாய நிலங்களில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராமத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த இழப்பீடுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் அந்த நிலங்களுக்கு அருகில் உள்ள கால்வாய்களை தூருவாரா வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.