லடாக்கில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

லடாக்கில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உள்ளவர்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். லடாக்கில் இன்று காலை 9.22 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.
இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக தெரியவரவில்லை.
இதில் உயிர் சேதம் இருக்கின்றதா, இதனால் காயம் அடைந்தவர்கள் எதனை பேர் என்பது குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.




