சென்னையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே போட்டி நிலவுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவருமே அம்மாவின் மரணத்திற்கு பிறகு முதலமைச்சர் ஆகா போட்டி இட்டனர். இதேபோல் இந்த முறையும் நாடாகும் என எதிர் பாக்க படுகிறது.
இந்நிலையில் வருகிற 7-ந்தேதி (நாளை) முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக செயற்குழு கூட்டத்திற்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார். மேலும் பதினோரு பேர் கொண்ட குழுவை பன்னீர்செல்வம் அமைக்கப்போவதாகவும் தகவல். இந்நிலையில் தன் ஆதரவாளர்களை சந்தித்தார் பன்னீர்செல்வம் அதன் பின்னர் முடிவுகள் தொண்டர்களில் கருத்து அடிப்படையில் எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றனர். மேலும் நாளை வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் நிலையில் முதலமைச்சரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ சந்தித்து ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.