மத்திய அரசு அனைத்து மக்களும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என கடந்த 2022ம் ஆண்டு உத்தரவிட்டது. மேலும் அதற்கான பணிகள் தேர்தல் அலுவலர்கள் மூலம் மற்றும் அரசின் செயலி வழியாக அந்த ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி உடன் ஆதார் வாக்காளர் இணைப்பு பணிகளுக்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் 2024 மார்ச் 31-ஆம் தேதி வரை அதாவது மேலும் ஓர் ஆண்டுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு கூறியதாவது, இதுபோன்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. இதற்காக மேலும் 4.21 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான இணைப்பு பணிகள் தொடங்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.