ஆஸ்திரேலிய பயனாளர்கள் இனி செய்திகளை படிக்க முடியாது என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா பயனாளர்கள் சமூக வலைத்தளங்களில் செய்தியை படிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆகையால் இன்று முதல் ஃபேஸ்புக்கில் எந்த ஒரு செய்தியையும் படிக்கவும், பகிரவும் ஆஸ்திரேலியா பயனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா பத்திரிகையாளர்கள் ஃபேஸ்புக்கில் செய்திகளை வெளியிடலாம். ஆனால் அதன் லிங்குகள் மற்றும் பதிவுகளை ஆஸ்திரேலிய பயனர்களால் பார்க்கவும், பகிரவும் முடியாது என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக்கின் இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலிய அரசாங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.