கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் Yahoo Answers, நீண்ட காலமாக இயங்கும் வலைத்தள கேள்வி பதில் தளங்களில் ஒன்றாகும். ஆனால், Google Answers மிகவும் பிரபலமாக இருப்பதால் Yahoo Answers தற்போது நிரந்தரமாக மூடப்படப்போகிறது. Yahoo Answers வலைத்தளத்தில் உள்ள தகவலின்படி, இது மே 4 முதல் நிரந்தரமாக முடங்கப்போகிறது.
இப்போது வெரிசோன் மீடியா குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் Yahoo, இந்த மாற்றத்தை Yahoo Answers முகப்புப்பக்கத்தின் மேலே அறிவித்துள்ளது.
பயனர்கள் ஜூன் 30 வரை தங்கள் தரவைக் கோர வேண்டும் இல்லையென்றால் அதற்குப் பிறகு அதை அணுக முடியாது. ஏப்ரல் 20 முதல் பயனர்கள் இனி எந்த புதிய கேள்விகளையும் பதில்களையும் பதிவிட முடியாது, இருப்பினும் அவர்கள் தங்கள் கேள்விகள் மற்றும் பதில்களின் நகலைப் பதிவிறக்க விரும்பினால், அவர்கள் Privacy Dashboard க்குள் உள்நுழைந்து பதிவிறக்கம் கோருவதன் (requesting a download) மூலம் இதைச் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் இதை ஜூன் 30, 2021 வரை செய்யலாம், அதன் பிறகு அவர்களின் Yahoo Answers தரவுகள் பாதுகாப்பாக நீக்கப்படும், இனி கிடைக்காது.
Yahoo Answers ஏலம் வந்துள்ளதை அடுத்து Google Answers இடம் சரணடைந்து விட்டது என்பது தெளிவாக தெரிகிறது. கூகிளின் தயாரிப்புகள் மக்கள் இணையத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை மாற்றியுள்ளன. இதற்கிடையில், Reddit மற்றும் Quora போன்ற பிற பிரபலமான தளங்களும் மக்கள் தங்கள் கேள்வி பதில்களை விவாதிக்க ஒரு இடத்தை வழங்குகின்றன. இதையடுத்து Yahoo Answers நிரந்தமாக மூடப்படப்போகிறது.