அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களில் முடிவெடுக்காமல் இருப்பதால் பொது நல வழக்குகள் அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, 30 நாட்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் என்ற அரசாணையை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரசு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க கோரிய வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதியளித்தார்.




