முதுமலை பொக்காபுரம் வனப்பகுதிகளில் தற்போது ‘பிளேம் ஆப் தி பாரஸ்ட்’ மரங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இரவில் அதிக பனிப்பொழிவும், பகல் நேரத்தில் வெயில் அதிகமாக நிலவும் இதன் காரணமாக செடி கொடிகள் காய்ந்த நிலையில், வனப்பகுதி வறட்சியாக காணப்படும்.
இக்காலகட்டத்தில் வனப்பகுதிகளில் உள்ள ‘பிளேம்ஆப் தி பாரஸ்ட்’ மரங்களில் பூக்கள் மரங்கள் முழுவதும் பூத்து காணப்படும்.
வறட்சியான வனப்பகுதியில் செந்நிறமாக காணப்படும் இந்த மலர்கள் தீப்பிழம்புகள் போலக் காணப்படுவதாலும் தொலை தூரங்களில் இந்த மலர்களைப் பார்க்கும்போது காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதுபோல் காணப்படும்.
இதனால், வனச்சுடர் என்ற மற்றொரு பெயரும் இம்மலருக்கு உண்டு.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொக்காபுரம் வனப்பகுதியில் ‘பிளேம் ஆப் தி பாரஸ்ட்’ மலர்கள் பூத்து குலுங்குகின்றன. வறட்சியான காலத்தில் இந்த மலர்கள் பூப்பதால் பறவைகள், தேனீக்களுக்கு தேவையான தேன் கிடைக்கின்றது.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இதை பார்த்து ரசித்து செல்கின்றனர்.