முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்மோகன் சிங்கிற்கு மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.