பிரான்ஸ் நாட்டில் டைனோசரின் எலும்புக்கூடு ரூ. 25.85 கோடிக்கு ஏலம்போனது.

பிரான்சு நாட்டில் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் எலும்புக்கூடு 25கோடியே 85 லட்சத்திற்கு ஏலத்தில் விலைபோயுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க நாட்டில் உள்ள ஒய்மிங் மாநிலத்தில் ஒரு டைனோசர் எலும்புக்கூடு கண்டெடிக்கப்பட்டது.
உலகெங்கிலும் இதுகுறித்தசெய்திகள்,தகவல்கள் பெரும் பரவலாகப் பேசப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் உள்ள ஒய்மிங் மாநிலத்தில் ஒரு டைனோசர் எலும்புக்கூடு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஏல மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு நடைபெற்ற ஏலத்தில் இந்திய மதிப்பில் சுமார் 23 கோடியே 85 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த டைனோசர் எலும்புக்கூடு 3 மீ உயரமும் 10 மீட்டர் நீளமுடையதாகும்.




