தனியார் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் ஊழியர், மோசடிகளிலேயே பலே மோசடியை நடத்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
தனியார் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் ஊழியர், மோசடிகளிலேயே பலே மோசடியை நடத்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
சென்னை அடுத்து இருக்கும் பழைய மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு கடையை தேர்ந்தெடுத்து அதில் ஏற்கனவே அவர்களுக்காக ஒட்டிருக்கும் க்யூஆர் கோடுகளை மாற்றி தனது நண்பர்களின் வங்கிக் கணக்குகளுக்காக, தான் பிரத்யேகமாக உருவாக்கிய க்யூஆர் கோடுகளை ஒட்டி பல கோடி மோசே செய்துள்ளார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் போது, அவருக்கு இந்த க்யூஆர் கோடுகள் கிடைத்துள்ளன. அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறியதும், அவற்றைப் பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
பழைய மகாபலிபுரம் சாலையில் ஒட்டியுள்ள க்யூ ஆர் கோடுகளை எடுத்துவிட்டு மோசடி செய்வதற்கென்றே பிரத்தியேகமாக செய்யப்பட்ட க்யூ ஆர் கோடுகளை இரவு நேரத்தில் ஒட்டிவிட்டு சென்றுள்ளார்.
பல வணிகர்கள், தங்களது கடைகளில் சிறிய அளவில் பொருள்கள் வாங்குவோர் க்யூஆர் கோட் மூலம் பணம் செலுத்தும் போது அதை சரியாகக் கவனிக்காமல் விட்டுவிடுவது இவருக்கு சாதகமாக இருந்துள்ளது.