இன்று சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட ரூ.656 குறைந்தது.ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40672 உள்ளது…
தமிழக பெண்களுக்கு தங்கம் பிடித்தமான ஒன்றாகும்.தங்க நகைகளை ஆபரணமாக போட்டு அழகு பார்ப்பதில் பெண்களுக்கு அலாதி பிரியம், மேலும் இப்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும். இதனால் நடுத்தர வர்க்ககத்தினர் தங்கத்தின் மீது அதிகம் முதலீடு செய்கின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை நாள்தோறும் அனைத்து தரப்பு மக்களாலும் உற்று நோக்க படுகிறது.
அந்த வகையில் சென்னையில் இன்றைய 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் 1 க்கு நேற்றைய விலையை விட 82 ரூபாய் குறைந்து 5156 ரூபாய்க்கும், ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை 40672 ரூபாய்க்கும், அதே போல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் 1 க்கு 5338ஆகவும், 10 கிராம் தூய தங்கத்தின் விலை 53380 ரூபாய்க்கும், வெள்ளியை பொறுத்தவரை கிராம் 1க்கு 73 ரூபாய் 70 பைசாவுக்கும் 1 கிலோ வெள்ளி 73700 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.