இந்தியாவில் சுங்கச்சாவடி மூலமாக மத்திய அரசுக்கு 38 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
சுங்கச்சாவடிகளில் நான்கு சக்கர வாகனங்களான பேருந்து,லாரி மற்றும் கார் போன்றவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதாகியுள்ளது.
எனவே இப்பிரச்சனையை தவிர்க்க கடந்த 2016 ம் ஆண்டு “பாஸ்டேக் ” என்னும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் முறையில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
எனவே இனியும் பாஸ்டேக் முறைக்கு வாகன உரிமையாளர்கள் மாறுவதற்கு கால அவகாசம் அளிக்கப் போவதில்லை.மேலும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சுங்கச்சாவடிகள் மூலம் தற்போது ரூ . 38.000 கோடி வருமானம் கிடைப்பதாக கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதின் கட்கரி இப்போது சுங்கச்சாவடிகளில் கிடைக்கும் ரூ 38000 வருமானத்தை விட அடுத்த 5 ஆண்டுகளில் 1. 25 லட்சம் கோடியாக உயர வேண்டும் என்றார்.
இந்தியாவில் 81% லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்குவதாகவும் மாற்றாக எனது அமைச்சகமும் முன்முயற்சி எடுத்து அரசு ஆய்வகங்கள் தொடர்பான ஆராய்ச்சி நடத்தி ஹைட்ரஜன் எரிபொருள் கலன்களை உருவாக்க முயற்சி செய்கின்றன.
எனது பரிந்துரையின்படி மாற்று எரிபொருளாக்காக நாடு செல்ல வேண்டிய நேரமாக இருக்கிறது.
இந்தியாவில் உபரி மின்சாரம் இருப்பதால் மின்சாரத்தை நான் ஏற்கனவே எரிபொருளாக பிரச்சாரம் செய்திருக்கிறேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். முதலில் கூறியபடியே பாஸ்டேக் முறை மிக முக்கியம் இனி காலநீட்டிப்பும் கிடையாது என்று உறுதியாகக் கூறினார்.
பின்னர் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக சென்னையில் இன்று மாலை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக உள்ளேன் என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.
அத்துடன் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் மாட்டு சாணம் மூலம் பெயிண்ட் தயாரிக்கும் முறை வரவேற்பை மிகுந்த பெற்றுள்ளது.
கழிவு நீரை கூட பணமாக்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும் என்றும் விவசாயிகள் தங்களுடைய டிராக்டர்களுக்கு இயற்கை எரிவாயுவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் .