இனி சனிக்கிழமைகளிலும் இறைச்சி மற்றும் மீன் கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. எனவே, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது.
இதனால், சனிக்கிழமைகளில் இறைச்சிக்கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இது கொரோனா தொற்றை மேலும் பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே, இதனை தடுக்கும் விதமாக, சனிக்கிழமைகளிலும் இறைச்சி மற்றும் மீன் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.