சாலை ஓரமாய் நிறுத்தியிருந்த அரசுப் பேருந்தை மது போதையில் இருந்தவர் இயக்கியதால் விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஒரு அரசு பேருந்து சென்னைக்கு இசிஆர் வழியாக வந்தது. அப்போது பேருந்து தமிழக எல்லைப்புறப் பகுதியான கனகசெட்டிக் குளத்தில் ஓட்டுநர் நிறுத்திவைத்தார். பயணிகளும் இறங்கிவிட்டனர். பின்னர் ஓட்டுநரும் நடத்துனரும் டீ சாப்பிடுவதற்காகக் கீழிறங்கிக் கடைக்குச் சென்றனர்.
அப்போது அங்கு மதுபோதையில் வந்த ஒருவர் பேருந்தில் ஏறி, அதில் சாவி இருந்ததால் பஸ்ஸை இயக்கியுள்ளார்.
இதைப் பார்த்த ஓட்டுநர் மற்றும், நடத்துநர் பதறியடித்துக்கொண்டு பேருந்தை நிறுத்த முயற்சித்துள்ளனர்.
இந்த பேருந்து அங்கிருந்த 6 பைக்கிகள் மற்றும் ஆட்டோ ஒன்று சேதமடைந்தன.
மேலும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்துள்ளதால் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த்துள்ளனர்.
இந்நிலையில் போலீசார் இந்த விபத்தை ஏற்படுத்திய போதை நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




