உலகின் மிக பெரிய முயல் என்ற கின்னஸ் சாதனை படைத்த முயல், இங்கிலாந்தில் திருடு போனது. அதனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் வசித்து வரும் அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் நீளமான காதுகளை கொண்ட, பெரிய சைஸ் முயல் ஒன்றை வளர்த்து வந்தார். டேரியஸ் என பெயரிடப்பட்ட இந்த முயல் 4 அடி நீளம் வளர்ந்திருந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு உலகின் மிக நீளமான முயல் என்ற கின்னஸ் சாதனை படைத்தது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு, பிரிட்டனில் உள்ள தோட்டம் ஒன்றில், இந்த முயல் திருடு போய் விட்டது. இதுகுறுித்து மெர்சியா போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகின் பெரிய முயலான டேரியஸ் காணாமல் போய்விட்டது. அதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் போலீசாரை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். 4 அடி நபளம் கொண்ட அந்த முயல், தனிச்சிறப்பு வாய்ந்தது’’ என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த முயலின் உரிமையாளர் எட்வர்ட்ஸ், தனது வலைதள பக்கத்தில், முயலை தன்னிடம் ஒப்படைக்கும் படியும், அதை கண்டு பிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். முயல் கிடைத்துவிட்டால் அதனை கொண்டுவருபவர்களுக்கு ஆயிடம் பவுண்ட் (இந்திய மதிப்பில், 1.03 லட்சம் ரூபாய்) தரப்படும் என அறிவித்திருக்கிறார்.