இதய குறைபாட்டால் உயிருக்கு போராடும் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவி செய்யுங்கள்.

ரம்யா, சந்தோஷ் இருவரும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2016ம் வருடம் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
பொருளாதார ரீதியாக செட்டில் ஆன பிறகு இவர் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருந்தனர். சந்தோஷ் எலக்ட்ரிஷியனாக இருக்கிறார். ரம்யா ஆசிரியராக இருக்கிறார். இருவரும் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்கள் இருவரும் தங்கள் குழந்தையை வளர்க்க தனியார் அமைப்பு ஒன்றில் பணம் சேமித்து வந்தனர். அவர்கள் போதுமான பணம் சேர்த்து குழந்தையும் பெற்றுக்கொண்டனர். . இந்த நிலையில் குழந்தை பிறந்த பின் சரியாக தற்போது அந்த தனியார் அமைப்பு பணத்தை தூக்கிக் கொண்டு காணாமல் போய்விட்டது.
லாக்டவுன் காரணமாக இவர்களை கண்டுபிடிப்பது இன்னும் சிரமம் ஆகியுள்ளது. இந்த நிலையில் பிறந்த குழந்தைக்கும் இதயத்தில் கோளாறு இருந்துள்ளது. இதனால் போரூர் மருத்துவமனையில் இருந்து குழந்தையை சில்ட்ரன்ஸ் மருத்துவமனையில் சென்னையில் சேர்த்தனர். இந்த நிலையில் மியாட் மருத்துவமனையின் உதவியுடன் மீண்டும் போரூரிலேயே அந்த குழந்தைக்கு உதவியுடன் கூடிய சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் அந்த குழந்தையை மீண்டும் போரூரில் சேர்த்தனர். தற்போது அந்த குழந்தைக்கு யாழ் நிலா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. யாழ்நிலாவிற்கு இதயத்தில் குறைபாடு உள்ளது. இந்த குழந்தைக்கு DORV, VSD, PS, SPO2 குறைபாடு உள்ளது. இதனால் உடனே குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் . இதற்கு 4 லட்சம் ரூபாய் செலவு ஆகும்.
யாழ்நிலாவிற்கு உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். யாழ்நிலா உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும். நீங்கள் யாழ்நிலாவின் உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும். இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!




