தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு கன மழை தொடரும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.