
ஹிமாச்சல பிரதேச மாநில முதல்வர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு…..
இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கொரோனா தாக்கம் குறைவாக உள்ளது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்திற்குள் தான் உள்ளது. இதனிடையே சிம்லாவில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாநில முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார். எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், கொரோனா வழிமுறைபடி தனிமைப்படுத்திக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.