எளிதில் கிடைக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டே வீட்டில் இந்த மாஸ்க் வகைகளைச் செய்து பாருங்கள். உங்கள் முகம் ஜொலிப்பதைக் கண்டு நீங்களே வியக்கப்போவது நிச்சயம்!
முதலில் முகத்தை நன்றாக கழுவி, சுத்தம் செய்து கொண்டு, மிருதுவான துணி கொண்டு துடைத்து விடுங்கள். பிறகு, கீழ்க்கண்டவற்றில் உங்களுக்கு தேவையானதைத் தேர்ந்தெடுத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள்.
கொக்கோ மாஸ்க்

- 1/4 அவோகேடோ மசித்துக் கொள்ளுங்கள். இதனுடன் தலா 1 tbsp தேன் மற்றும் கொக்கோ பவுடர் கலந்து, நன்றாக மசித்துக் கலக்குங்கள்.
- 10 நிமிடம் முகத்தில் வைத்திருந்து, பிறகு கழுவுங்கள்.
வாழைப்பழ மாஸ்க்

- 1/2 வாழைப்பதை மசித்துக்கொண்டு, தலா 1 tbsp ஆரஞ்சு சாறு மற்றும் தேன் கலந்து கொள்ளுங்கள். அங்கங்கே கட்டியாக இருந்தால் தவறல்ல.
- 15 நிமிடம் முகத்தில் வைத்திருந்து, லேசான சூடு இருக்கும் நீரில் முகத்தைக் கழுவுங்கள்.
முட்டை மாஸ்க்

- 1 முட்டையின் மஞ்சள் கரு, தலா 1 tbsp தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து, அதனுடன் 1/2 கப் ஓட்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- 15-20 நிமிடங்கள் முகத்தை இதில் ஊறவைத்து லேசான சூடு இருக்கும் நீரில் முகத்தைக் கழுவுங்கள்.
பப்பாளி மாஸ்க்:

- 1/2 கப் மசித்த பப்பாளி பழத்துடன், 2 tbsp தேன் கலந்து கொள்ளுங்கள்.
- 15-20 நிமிடங்கள் முகத்தை இதில் ஊறவைத்து பிறகு கழுவுங்கள்.
ஆரஞ்சு பழ மாஸ்க்:

- 3 tbsp ஆரஞ்சு பழச்சாறுடன் 1/4 கப் தேன் கலந்து கொள்ளுங்கள்.
- 15 நிமிடங்கள் முகத்தை இதில் ஊறவைத்து பிறகு லேசான சூடு இருக்கும் நீரில் கழுவி, மாய்ச்சுரைசர் போடுங்கள்.
மோர் மாஸ்க்:

- மிகச் சுலபமாக செய்யலாம். 1/2 கப் மோருடன், 2 tbsp தயிர்(Yoghurt) சேர்த்து முகத்தை 1-2 மணி நேரம் ஊறவைத்து பிறகு கழுவுங்கள்.




