கனியார்மூர் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வரும் புதன்கிழமை முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கூறி நடத்திய போராட்டம் கலவரமானது.இந்த கலவரத்தில் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் பொருட்களும் சூறையாடப்பட்டன. மேலும், 3,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களின் டிசியும் எரிந்து போனதாக தகவல் வெளியானது. இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த பள்ளியில் பயின்ற மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, வரும் புதன்கிழமை முதல் (ஜூலை 27) ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும், 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் தீயில் எரிந்துபோன ஆசிரியர்களின் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
-பா.ஈ.பரசுராமன்.