செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2வது சுற்று போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய 3 ஆட்டங்களிலும் 4-0 என்ற கணக்கில் முழுமையாக வெற்றி பெற்றது.
இன்று தொடங்கிய 2வது ஆட்டத்தில் இந்திய பி அணி எஸ்டோனியாவை எதிர்கொண்டது. இந்திய பி அணியில் தமிழக வீரர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், அதிபன் மற்றும் ருனாக் சாத்வனி ஆகியோர் விளையாடினர். இதில் எஸ்டோனியா வீரர் சுகாவை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். இவருடன் இந்திய வீரர் அதிபன் மற்றும் குகேஷ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்தியாவின் 6 அணிகளில் 3 அணிகள் வெற்றி பெற்றுள்ளன.