மின்சார சட்டத்திருந்த மசோதா நிறைவேறும் பட்சத்தில் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.
மின்சார சட்டதிருத்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மக்களவையில் மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது எதிர்கட்சிகள் கடும் விமர்சனம் வைத்ததை தொடர்ந்து மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.
இந்த மின்சார சட்டத்திருத்த மசோதாவில், மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். உற்பத்தி செலவுக்கு இணையாக கட்டணம் இருந்தால் விநியோக நிறுவனங்களை சிறப்பாக நடத்த முடியும். மானியத்தை கணக்கில் கொள்ளாமல் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் போன்றவை அம்சங்களாக உள்ளன.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,
*தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் முதல் 100 யூனிட் மின்சார திட்டம் ரத்து செய்யப்படலாம்.
*மின் கட்டணத்தை மத்திய ஒழுங்குமுறை ஆணையமே இனி நிர்ணயம் செய்யும் என்பதால் மின் கட்டண உயர்வு ஏற்படலாம்.
*மின் விநியோகம் தனியாரிடம் தரப்படும்.
*விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படலாம்.
*மாநிலத்தின் மின் உற்பத்தியை மாநில அரசின் ஒப்புதல் பெறாமல் பிற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கலாம். இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அஞ்சுகின்றனர்.