துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களின் அதிகாரங்களை குறைக்கும் மசோதாவிற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள், அவரது செயல்பாடுகளை குறைக்கும் வகையில் தற்போது மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதனால் அடுத்துவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். மேலும், துணைவேந்தர்கள் நியமனத்திற்கான தேடுதல் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 3ல் இருந்து 5ஆக அதிகரிக்கப்படவுள்ளது.