முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் இருந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4 மணி அளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். மேலும், நீட் விலக்கு, மேகதாது விவகாரம், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றில் தமிழக அரசு நலன்சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைத்தார். முன்னதாக, குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து கூறினார்.