பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு பருத்திநூல் வாங்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையின்போது கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் 1983ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பொங்கள் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்திற்கு 1,683 மெட்ரிக் டன் பருத்திநூல் வாங்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.
1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதற்கான இந்த டெண்டருக்கு செப்டம்பர் 9ம் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் கைத்தறி நெசவாளர்கள் 15 ஆயிரம் பேரும், விசைத்தறி நெசவாளர்கள் 54 ஆயிரம் பேரும் பலன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




