இறுதிப்பருவ தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: இளநிலை, முதுநிலை, தொழில் பட்டப் படிப்புகளுக்கான தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நாளை (01.09.2022)வெளியாகின்றன. தேர்வு முடிவுகளை https://results.unom.ac.in, https://exam.unom.ac.in, https://egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும், செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலை மாணவர்களுக்கு ₹1,000 எனவும், இளநிலை மாணவர்களுக்கு ₹300 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.