3,5,8ஆம் வகுப்புகளில் நுழைவுத்தேர்வை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்ட மண்டல மாநாடு நடைபெற்றது. இதில், அமைச்சர் பொன்முடி கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது: பொறியியல் பாடத்திட்டம் போல், கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டமும் மாற்றப்படும். பொறியியல் முதலாமாண்டு, 2ம் ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டதுபோல் 3ம் ஆண்டுக்கும் புதிய பாடத்திட்டம் வரும். தற்போதைய காலத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும். 3,5,8ஆம் வகுப்புகளில் நுழைவுத்தேர்வை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.