சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நவம்பர் 4ம் தேதி தீபாவளிக்கு வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் அண்ணாத்த. தமிழக திரையரங்குகளில் 70 சதவிகித இடங்களை அண்ணாத்த நிரப்பியது.

படம் வெளியான முதல்நாள் கொண்டே ரசிகர்கள் பெரு ஆதரவுடன் திரையரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. கலவையான மற்றும் நெகட்டிவான விமர்சனங்கள் வந்த போதும் தூர எறிந்தபடி வசூல் சாதனை படைத்து வருகிறது.
ஆனால் பெண்கள் மற்றும் குடும்ப ரசிகர்களின் பேராதரவை பெற்ற அண்ணாத்த திரைப்படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு பெண்களும் குழந்தைகளும் படையெடுத்து வருகின்றனர். அண்ணாத்த படம் வெளியான முதல் வாரத்திலேயே உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் வெறும் நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




