நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியை இந்தியா மழையால் இழந்தது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடைபெற்றது. முதல் போட்டியை நியூசிக்கு எதிராக இழந்து, 2வது போட்டியும் மழையால் ரத்து ஆனதால் இன்றைய போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். தொடக்கம் முதலே தடுமாறி வந்த இந்திய அணி 47.3 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 51, ஷ்ரேயாஸ் ஐயர் 49 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் மில்னே, மிச்செல் தலா 3 விக்கெட்டும், சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடியது.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி வந்த நியூசிலாந்து 18 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இந்த போட்டியும் ரத்தாக முதல் போட்டியை நியூசிலாந்து வென்றிருந்ததால், அந்த அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. தொடர் நாயகன் விருதை டாம் லாதம் தட்டிச் சென்றார்.