நம்மில் பெரும்பான்மை மக்களுக்கு இருக்கும் மனம் சார்ந்த பிரச்சனை இந்த தாழ்வு மனப்பான்மை இதுகுறித்து Dr.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் அளித்துள்ள தகவல்கள் பின்வருமாறு..
இந்த தாழ்வு மனப்பான்மை என்பது மனத்தாழ்வு நிலையாக முற்றும் வாய்ப்பு உள்ளதுபலருக்கும் தங்களின் உடல் நிறம் , உடல் சார்ந்த அழகு , எடை போன்றவற்றின் மீதும் இன்னும் அநேகருக்கு அவர்கள் செய்யும் தொழில் சார்ந்தும் அதில் ஈட்டும் வருமானம் குறித்தும் தாழ்வு மனப்பான்மை வரும்.
தாழ்வு மனப்பான்மை எதனால் தோன்றுகிறது என்று ஆராய்ந்தால்நம்மை பிறருடன் ஒப்பிடுவதால் தான் நம்மை தாழ்வாக நினைக்கிறோம்.
ஆம்.. நமது தொழிலை பிறருடைய தொழிலைக்கொண்டும்நமது வருமானத்தை பிறர் வருமானத்துடனும்இப்படி ஒப்பீடு செய்து கொண்டே சென்றால் கடைசியில் நமக்கு திருப்தியின்மை தோன்றி அது நம்மை தாழ்வு நிலைக்குத் தள்ளும்.
நாம் நமது வருமானத்தை மட்டுமே சமமாக வைத்து பார்ப்போம்.ஆனால் இருவரின் வாழும் சூழல் வேறு , குடும்ப நிலை வேறு இவற்றையெல்லாம் யோசிப்பதில்லை பெண்கள் தங்கள் அழகின் மீது கொள்ளும் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடே காஸ்மெட்டிக் அழகு சாதன பொருட்கள் விற்பனை படுஜோராக நடக்கிறது.
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பிறந்த சூழல், வளரும் சூழல் சுற்றுப்புறத்தின் பங்களிப்பு, பெற்றோர் வளர்ப்பு என்று எல்லாம் தனித்தனியாகவே இருக்கையில் நாம் நம்மை பிறரைக்கொண்டு ஒப்பிடுவது மடத்தனம் எதற்கும் மூட் சரியில்லை என்று கூறுவது,திடீர் திடீரென பொலபொலவென அழுவது.,உம்மென்று அமர்ந்து விடுவது.,அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் போது அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாமல் தவிப்பது இப்படி மனத்தாழ்வு நிலை பல வடிவங்களில் வெளிப்படும்.
ஏன் இந்த மனப்பிரச்சனை வருகிறது?
முதல் காரணம் அனைத்துக்கும் “நான்” என்ற எண்ணம் தான்.எந்த ஒரு விசயம் என்றாலும்நான் தான் செய்தேன்.என்னால் தான் முடியும்.நான் மட்டுமே இதற்கு தகுதியானவன்.என்னை வெல்ல ஒருவனுக்கும் தகுதியில்லை.என்னாலன்றி எப்படி இந்த அலுவலகம் இயங்கும்?
என்னால் தான் வெற்றி வந்தது?
இப்படி அனுதினமும் இந்த “நானை” கட்டிக்கொண்டு திரிந்தால் உங்களுக்கு மனத்தாழ்வு நிலை வரும் வாய்ப்பு மிக மிக அதிகம்.காரணம் இந்த உலகத்தின் இயற்கை நியதி அப்படிப்பட்டதல்ல.நான் என்று கூறிய பலரும் சந்தித்த மரணம் ஒன்று தற்கொலையாகவோ இல்லை.. மர்மமானதாகவோ அல்லது மிகவும் கொடூரமானதாகவோ தான் இருந்திருக்கிறது.
நாம் முன்னெடுக்கும் அனைத்து விசயங்களிலும் கூட்டு முயற்ச்சியுடன் நாம் என்று கூறிப்பாருங்கள்பொறுப்பை பலருக்கும் பகிர்ந்து செய்தால் வெற்றி தோல்வி போன்றவை நம்மை பாதிக்காது.
நான் மட்டுமே செய்வேன் எனும் போது
தோல்வி நம்மை பெரிதாக பாதிக்கும். வெற்றியும் தலைக்கணம் தரும்.மேலும் கடந்து சென்ற உறவுகள் , கடந்து சென்ற நொடிப்பொழுது போன்றவற்றை அப்படி அப்படியே விட்டுவிட்டு நகர்ந்து போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
இங்கு அனைவரும் பயணிகளே.இங்கேயே டேரா போட நினைக்கக் கூடாது.நினைத்தாலும் முடியாது.ஒரு பயணி எப்படி தான் செல்லும் இடத்தில் உணவுக்கும் உறையுளுக்கும் பிறரின் உதவியை நாடி இருப்பானோஅதைப்போல தான் நாமும்.கார் வாங்கி இப்போது சென்றாலும்…விடை பெற்று போகும் போதுநான்கு பேர் கணக்கும் நம் உடலை தூக்கிகுழி தோண்டி மண்ணுக்குள்உள்ளே இட்டு புதைக்க வேண்டுமே..
அதையும் தானே எப்படி செய்ய முடியும்??
அந்த குழியில் வைத்து புதைக்கப்படும் அத்தனை “நான்” களும்தாழ்வு மனப்பான்மையை வெல்ல என்ன செய்ய வேண்டும்???நம்மை பற்றிய குறைவான எண்ணம் தோன்றுகையில் நம்மை விடவும் கீழே உள்ள மக்களை ஒருதரம் நினைத்து பார்த்து நாம் அவர்களை விட நன்றாக இருக்கிறோம்.நேற்று நமது இருப்பை விட இன்றைய நிலை நன்றாக மேம்பட்டுள்ளது.
நமது சம்பாத்தியம் எவ்வளவாக இருப்பினும் அதைக்கொண்டே சிறப்பாக மகிழ்ச்சியாக வாழவேண்டும் .நிம்மதியான உறக்கமும் அமைதியான குடும்ப வாழ்க்கையும் மிகவும் சொற்பமாக சம்பாதிப்பவர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது.
அதிக சம்பாத்தியம் செய்யும் பலருக்கு தூக்கத்தை ஏசி போட்டு கர்லானில் படுத்து அல்ப்ராக்ஸ் போட்டாலும் கிடைப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.மனம் என்பதை வெற்றி தோல்வி லாப நட்டம் இவற்றிற்கு அப்டாற்பட்டு பார்க்க பழக்கிவிட்டால் நிச்சயம் நம்மை மனத்தாழ்வு நிலையோ தாழ்வு மனப்பான்மையோ அண்டாது…