கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கான கேப்டன் பதவி முதல் முறையாக கே.எல்.ராகுலுக்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து தோனி,கோலி.ரோஹித்திடம் இருந்து அணியை வழிநடத்தும் அனுபவத்தை கற்று கொள்வேன் என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

துபாய் :
ஐ.பி.எல் தொடரில் இந்த ஆண்டுக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கான கேப்டன் பதவியை கே.எல்.ராகுல் ஏற்கிறார்.இந்திய அணியின் விக்கெட் கீப்பராகவும்,தொடக்க ஆட்டக்காரராகவும் செயல்படும்
கே.எல்.ராகுல் கடந்த ஆண்டு ஐ.பி.எல்லில் நட்சத்திர ஆட்டக்காரராகவும் ஜொலித்தார்.மேலும் இவர் இந்திய அணியில் அடுத்த தோனியாகவும் பார்க்கப்படுகிறார்.இதுகுறித்து அவர் பேசியபோது இந்திய அணியில் தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.அவரது கீப்பிங் சாதனைகளை யாராலும் முறியடிக்கவும் இயலாது.அதனை தொடர்ந்து ஐ.பி.எல் கேப்டன்கள் விராட் கோலி, எம்.எஸ் தோனி மற்றும் ரோகித் சர்மா போன்றவர்களிடம் இருந்து தலைமை பண்புகளை கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் ,கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.பி.எல்லில் விளையாடி வரும் அவர்களின் தலைமையில் விளையாடுவதும் கற்றுக் கொள்வதும் சிறப்பானது என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி மற்றும் எம்.எஸ் .தோனி ஆகிய இருவரும் முற்றிலும் வித்தியாசமான கேப்டன்கள் என்றும் , அவர்கள் இருவரும் எப்பொழுதும் வெற்றி பெறும் விருப்பம் மற்றும் அதற்கு ஏற்ப அணியை வழிநடத்துவதில் ஒற்றுமை கொண்டவர்கள் என்றும் கூறியுள்ளார்.இதே மாதிரி ஒரு வழிமுறையை தான் நான் கடைப்பிடித்து,நடைமுறை படுத்துவேன் என்றும் கே.எல்.ராகுல் கூறினார்.




