இலவச விளம்பரம் ஆரம்பிச்சிட்டிங்க போல என்று சூர்யா படம் குறித்து விஜய் பட இயக்குனர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
சூர்யாவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவர தயாராக இருந்த படம் சூரரை போற்று. பின்னர் இந்த கொரோன சிக்கலால் தள்ளிப்போனது படம் ரிலீஸ் ஆகும் தேதி. இவ்வாறு இருக்க திடிரென்று ஒரு நாள் சூரிய அவர்கள் தன படமான சூறை போற்று திரையருங்களில் ரிலீஸ் ஆகாது அதற்கு பதில் ஓடிடி எனப்படும் amazon ப்ரிமே வெளியிடப்படும் எனும் தகவல் வெளியானது.
அந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. முக்கியமாக காட்டுப்பயலே இன்னும் பாடல் இளைஞர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது எனலாம்.
இவ்வாறு இருக்க தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற ’மண்ணுருண்ட மேல’ என்ற பாடலில் ஜாதியைக் குறிப்பிடும் ஒரு வார்த்தை இருப்பதாகவும், இது அமைதியை குலைக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கின் செய்தி குறித்து இயக்குநர் ஜான் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’இலவச விளம்பரம் ஆரம்பிச்சிட்டிங்க போல… குட் பாய்ஸ்’ என்று பதிவு செய்துள்ளார். இவர் எல்லோருக்கும் பிடித்த விஜய்யின் சச்சின் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.