
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்கள்.
இந்தநிலையில், நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் சுபேதார் சுக்தேவ் சிங் வீரமரணம் அடைந்தார்.இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது மேலும் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




