விஜயகாந்த் காலில் விழுந்த கருணாநிதி என்பதுபோல் சுதீஷ் போட்ட கார்ட்டூன், தேமுதிகவினருக்கு முகவும் ஷாக்களிக்க அதை வேகமாக நீக்கினார் சுதீஷ்.
கடந்த ஒரு வாரமாகவே அதாவது விஜயகாந்த் பிறந்த நாளில் இருந்தே தேமுதிக சம்பந்தமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.. இதற்கு பிள்ளையார் சுழி போட்டது பிரேமலதா விஜயகாந்த்தான். வரும் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது… அதிமுக, திமுக இல்லாத மாற்று அரசியல் தமிழகத்தில் வர வேண்டும் என மக்கள் ஆசைப்படுகிறார்கள்.. கருணாநிதி, ஜெயலலிதா என்ற 2 பெரிய ஆளுமைகள் இல்லாததால், வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது” என்று கூறியிருந்தார் பிரேமலதா விஜகாந்த்.
கிடைக்காது” என்று கூறியிருந்தார் பிரேமலதா விஜகாந்த். இதையடுத்து அரசியல் களத்திலும், அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் விவாதங்கள் கிளம்பி விட்டன.
இந்நிலையில், ஒரு பிரபல நாளிதழ் ஒரு கார்டூன் வெளியிட்டிருந்தது.. அதில் “மாபெரும் ஏலம் 2012-க்கான ஏலம் ஸ்டார்ட்” என்ற தலைப்பு இருந்தது.. அந்த கார்டூனில், தேமுதிக சின்னமான முரசு-வில் விஜயகாந்த்தை உட்கார வைத்துள்ளனர்.. அவர் கைகளை கட்டிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்துள்ளார். அவரை பிரேமலதா ஏலத்தில் விட போவதாக அறிவிப்பது போல, பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார். அவரது ஒரு கையில் மணி உள்ளது, மற்றொரு கையில் விரலை உயர்த்தி ஏலத்தை அறிவிக்கிறார்.. விஜயகாந்த், பிரேமலதா முன்பு 2 கட்சிகள் ஏலம் எடுப்பது போல நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. அதில், இரட்டை இலை, உதயசூரியன் சின்னம் வரையப்பட்டிருந்தது. இது தேமுதிவினர் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.
இதற்கு பதிலடியாக சுதீஷ் ஒரு கார்ட்டூனை வெளியிட்டார். அதில் கருணாநிதி மற்றும் வீரமணி விஜயகாந்தின் காலில் விழுவழது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கருணாநிதி மறைந்து விட்ட தலைவர். வழக்கமாக, மறைந்து போனவர்களை விமர்சிப்பது அநாகரீகம் என்று சொல்வார்கள். அந்த அடிப்படையிலாவது இந்த கார்ட்டூனை எடுத்து மேற்கோள் காட்டாமல் இருந்திருக்கலாம் சுதீஷ் என அவரவர் தரப்பு வாதங்களை பகிர்ந்து வருகின்றனர்.
தன் சகோதரியை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதற்காக, சுதீஷ் பதிலடி தருவது சரியானதுதான். அது நியாயமானதும் கூட அதற்காக கருணாநிதி, மூத்த தலைவர் வீரமணி போன்றோரை இழிவுபடுத்தியதை ஏற்கவும் முடியாது. இதுபோன்ற செயலகளை தேமுதேக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அரசியல் தலைவர்களால் கேட்டுக்கொள்ளபடுகிறது.