– S.P. கமல் சங்கர்

மலையனுர்ங்கிற கிராமத்துல சோமு தாத்தா-னு ஒருத்தர் இருந்தாரு.
அவருக்குக் கோழி வளர்க்குறதுனா ரொம்ப புடிக்கும். அப்புறம் அவரு பேரன் வினய் கூட விளையாடுறது. இது மட்டுந்தான் அவருக்கு புடிச்சது.
“அவரு வளர்க்குற கோழிக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு”. அது என்ன தெரியுமா? அதுகளுக்குப் பேச வரும். ஆனா இது தாத்தாக்கு தெரியாது! வினய்க்கு மட்டும் தெரியும்.
வினய் எப்பவும் அங்க உள்ள கோழி குஞ்சு கிட்டதான் விளையாடுவான். அப்படி ஒரு நாள் வினய் விளையாட வரல.
குஞ்சு ரொம்ப சோகமா இருந்துச்சு. அத பார்த்த அம்மா கோழி கேட்டுச்சு “என்ன ரொம்ப ஒரு மாதிரி இருக்க? என்ன ஆச்சுன்னு”? கேட்டுச்சு.
அதுக்கு குஞ்சு சொல்லிச்சு, இன்னைக்கு என்கூட விளையாட வினய் வரல. அதான் எனக்கு ரொம்ப போரடிக்குதுனு சொல்லிச்சு.
அம்மா நீ சும்மாதானே இருக்க! என் கூட விளையாடுமானு கேட்டுச்சு. இல்லடாமா எனக்கு நிறைய வேலை இருக்கு. நீ போய் வேற ஏதாச்சும் பண்ணு… அப்படினு சொல்லிட்டு அம்மா கோழி போக பார்த்துச்சு.
ஆனா குஞ்சு விடல. அம்மா, அம்மா ப்ளீஸ்மா! நான் ஒரு கேள்வி கேட்குறேன்மா? அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்கம்மானு தொந்தரவு பண்ணுச்சு.
சரி, சரி கேளு! நான் சொல்லுறேன் அப்படினு அம்மா கோழி சொல்லிச்சு. “அப்போ அங்க ஒரு வண்ணத்துப்பூச்சி வந்திச்சு. உடனே அந்தக் குஞ்சு கேட்டுச்சு. “அம்மா, இது என்னமானு?” கேட்டுச்சு.
இது தெரியாதா குட்டி, “இதுதான் வண்ணத்துப்பூச்சி” அப்படினு அம்மா சொல்லுச்சு .
அப்படியா!!! அம்மா… அம்மா இத எதுக்கு “வண்ணத்துப்பூச்சினு சொல்லுறாங்கமா” அதுக்கு என்ன காரணம்மா? அப்படினு கேட்டுச்சு.
அதுவா குட்டி, அது நிறைய கலர்ல இருக்குல்ல. அதான் அதுக்கு வண்ணத்துப்பூச்சினு பேரு வந்துச்சாம். சரி நான் இப்போ போலாமான்னு? அம்மா கோழி கேட்டுச்சு. அம்மா இன்னும் கொஞ்ச நேரம் இருமானு குஞ்சி சொல்லுச்சு.
அப்போ அங்க உள்ள மரத்தைக் காட்டி… அம்மா “மரம் எப்படிமா வளருதுனு கேட்டுச்சு”?
என் செல்ல குட்டி… மரம் பறவைகளின் எச்சங்கள் மூலமா மண்ணுல விதையா விழுந்து, அது மரமா வளருது. அதுக்கான தண்ணீர், வானத்துல இருந்து வர மழை மூலமா கிடைக்குது. அதான் மரம் செழிச்சு வளருது.
சூப்பர் அம்மா. இது எல்லாம் இப்போ தான் தெரியுதுமா.
அப்புறம் விடாம குஞ்சி கேட்டுச்சு… “அம்மா, அந்த மரத்துல ஒன்னு நிக்குதே… அது என்ன மா? எது டா செல்லம்?
அங்க பாருங்கம்மா அந்த மரத்துல ஒட்டி இருக்குல அதுமா. அதுவா, அதுதான் நம்ம ஓணான் அண்ணன்!.
நம்ம அண்ணன் என்ன வகைய சேர்ந்ததுமா? அவங்க பல்லி வகைய சேர்ந்ததுடா குட்டி.
அவங்க என்ன சாப்பிடுவாங்கமா? அவங்க சின்ன, சின்ன பூச்சி, கொசு, இத எல்லாம் அவங்க நாக்க நீட்டி சாப்பிடுவாங்கனு சொல்லிச்சு அம்மா கோழி.
“அதோ அங்க பாரு… உன் நண்பன் வினய் வந்துட்டான்”! நீ போய் விளையாடு. நான் போய் என் வேலைய பார்க்குறேன் சொல்லிட்டு, அம்மா கோழி போய்டுச்சாம்.
இவ்வளவு நேரம் அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தத எல்லாம் அவன் கேட்டிட்டுத்தான் இருந்தான்னு அவங்களுக்கு தெரியாது. அவன் மனசுல ஒரு முடிவு பண்ணிக்கிட்டான்.
நாமும் இந்தக் குஞ்சு மாதிரி இருக்கணும்னு. அப்புறம் கோழி சொன்னா மாதிரி பறவைகளை மரம் வளர்க்கும் போது, நாமும் நம்மலால முடிஞ்ச வரை செடி வளர்ப்போம்னு முடிவு பண்ணிட்டு, தாத்தா வீட்டைவிட்டு கிளம்பினான்.
மறுநாள் காலைல தாத்தா வீட்டுத் தோட்டத்துல அவன் விதை விதைக்க ஆரம்பிச்சான். சோமு தாத்தா அத ஆச்சரியத்தோடும், பெருமையோடும் பார்த்து சந்தாஷப்பட்டார்.
அப்புறம் வினய்ய கூப்பிட்டு… என்னாச்சு வினய்? என்ன இன்னைக்கு புதுசா விதை எல்லாம் விதைத்து, செடி வளர்க்க ஆரம்பிச்சு இருக்க.!
நான் எப்பக் கூப்பிட்டாலும், போ தாத்தா கை எல்லாம் மண்ணு ஒட்டிக்கும்னு வர மாட்டேன்னு சொல்லுவ! நான் அப்போ நிறைய சொன்னேன் உனக்குப் புரியல. நீ விளையாட்டுத்தனமா இருந்தடா?
இப்போ என்னடானா! என்ன கூட கூப்பிடமா, நீயே எல்லாம் பண்ணுற… என்னடா விஷயம்? சொல்லு டா வினய்.
தாத்தா அது வந்து… நான் சொன்னா நீ நம்ப மாட்ட.
“சொல்லு வினய் நீ சொன்னா கண்டிப்பா நம்புவேன்! தாத்தா என்னோட இந்த மாற்றத்துக்கு காரணம் நம்ம டீனு. அது யாருடா உன்னோட புது நண்பனா”?
தாத்தா மறந்துட்டியா! நம்ம வீட்டுக் கோழி குஞ்சு பேரு தாத்தா.
அட ஆமா…… நான் மறந்துட்டேன். சொல்லு அது எப்படி உன்ன மாத்துச்சு?.
நேத்து நான் லேட்டா வந்தேன்ல… அப்போ டீனு அவங்க அம்மா கிட்ட நிறைய கேள்வி கேட்டுச்சு. அதுக்கு அவங்க அம்மா பொறுமையா பதிலும் சொன்னாங்க. அப்புறம் தான் இந்த மாற்றம்னு சொல்லிட்டு, அம்மா கோழியும், டீனுவும் பேசின எல்லாத்தையும் சொன்னான் வினய்.
தாத்தா அப்படியே ஆடி போய் நீன்னுட்டாங்க.
என்னடா! சொல்லுற கோழி பேசுச்சா! ஆமா தாத்தா… நான் முதல சொன்னன்ல நீ நம்ப மாட்டேன்னு… போ! தாத்தா உன் கூட டூ!
இல்லடா! வினய் நான் நம்புறேன்டா! இந்த தாத்தா கிட்ட டூ எல்லாம் விடாத டா!
சரி உன்ன இப்படி மாத்துன டீனுக்கு நன்றி சொல்லிட்டு, நீ அது கூட விளையாடு! அது கூட பேசு! நானும் அத பார்க்குறேன்டா! சரி தாத்தா…
வினய் டீனு கிட்டப்போய், “தான் செடி வச்சதை எல்லாம் சொன்னான். நீ உங்க அம்மா கிட்ட பேசுனத நான் கேட்டேன். அதான் இதுக்கு எல்லாம் காரணம். நன்றி நண்பா!
நண்பானு சொல்லிட்டு நன்றி சொல்லாத வினய்! நீயும், உன் தாத்தா சொல்லுறத, அம்மா சொல்லுறத எல்லாம் கேளு. அவங்கக் கிட்ட இருந்து நிறைய தெரிச்சுக்கோ!
இப்போ என்னப் பார்த்து உன் மனசு மாறின மாதிரி, நீ உன் நண்பர்கள் மனதை மாத்து.
எல்லாரும் சேர்ந்து ஒரு ஒரு செடி வச்சாலும், இந்த ஊரே இயற்கை அழகா மாறிடும்.
கண்டிப்பா பண்ணுறேன் டீனு. இந்த ஊரை மட்டும் இல்ல, முடிச்சா இந்த உலகையே கூட இயற்கை பூமியா மாத்தலாம்.
சூப்பர் வினய்….. கண்டிப்பா நீ பண்ணுவ. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.
நாளை ஒரு புது உலகம் நமக்காக இருக்குகுற சந்தோஷத்தோட, வா விளையாடலாம்.
– கதைப் படிக்கலாம் – 143




