கோவை : இன்று மாலை ஐந்து மணி முதல் தொடர்ந்து 36 மணி நேரம் முழு ஊரடங்கு துவங்கியது. இதனால் மாலையிலேயே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவையில் இன்று மாலை 5 மணி முதல் வரும் 27 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் இந்த நேற்று வெளியிட்டிருந்தார்.
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு நேரத்தில் அதற்கு முந்தைய தினம் சாலைகளில் பொதுமக்கள் பல்வேறு அத்தியாவாசிய பொருட்களை வாங்க சமூக விலகல் இல்லாமல் நெருக்கமாக கூடினர்.
இதனை தவிர்க்க வேண்டி கோவையில் மாலை ஐந்து மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடைகள் அனைத்தும் மாலையிலேயே அடைக்கப்பட்டன.இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
ஊரடங்கினை மீறும் வகையில் தேவையின்றி வெளியே நடமாடுவோரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.பால், மருந்துகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். சந்தைகள், மளிகை கடைகள், மீன் சந்தைகள், மலர் சந்தைகள், இறைச்சி கடைகள், மதுபான கடைகள் போன்றவை அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.