விசாரணைக்காக அழைத்து வந்த வட மாநில நபர் காவல் நிலையம் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 20-ம் தேதி வேளச்சேரி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜா நிஷாந்த் (37) என்பவர் எச்சில் துப்ப போவதாக கூறி காவல் நிலையம் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜா நிஷாந்த் நேற்று மாலை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடராக, வேளச்சேரி காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம் குற்றப்பிரிவு காவலர் ஜெகதீசன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உயரதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

உயிரிழந்த ராஜா நிஷாந்தின் உடல் கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று உடற்கூராய்வு செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை 14 வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற மேஜிஸ்திரேட் பார்த்திபன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அவரது விசாரணை நடைபெற்று அதன் பின்பாக உடற்கூராய்வு தொடங்கப்பட உள்ளது.




