அஹிம்சைக் கொள்கையின் நாயகன் இப்பாரில் அவதரிந்த நாள் இன்று.

அஹிம்சைக் கொள்கையின் நாயகன் இப்பாரில் அவதரிந்த நாள் இன்று.
உலகில் அஹிம்சை என்பது கருவான பூமி இது. மகாவீரர், புத்தர் பிறந்த மண்ணில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றினாலுக் உலகின் எக்காலத்திற்குமான மக்களின் நிதர்சனமான போக்கென்பது அது அஹிம்சைதான் என்று, புத்தர் போதித்த தத்துவத்தையும் மகவீரர் போதித்த தத்துவத்தையும் இயேசு எபிரேயு மொழியில் பேசியதத்துவத்தையும் தன் செயலில் மூலம் விளக்கி அடிமைப்பட்டுகிடந்த இந்திய மக்களை அறவழியில் போராடத் தூண்டி, ஆங்கிலேய ஆதிக்கத்தைத் தன் பேரன்பாலும் இடைவிடாத சகிப்புத்தன்மையாலும் வென்று காட்டிய தேசப்பிதா அவர்.
காலனிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த தேசத்திற்கு ஒரு தலைவனைத் தேடிக் கொண்டிருந்த இந்தியாவுக்கு அவர் பாஞ்சாலியை இக்கட்டிலிருந்து மீட்டு அவள் மானத்தைக் காப்பாற்ற ஒரு கண்ணன் சீலை கொடுத்து உதவியதுபோல் காந்தி இந்தியாவின் அடிமைத்தளையறுக்கவேண்டி அஹிம்சை ஆயுதமாக்கிக்கொண்டு தனது மேனியில் கதரைத் தரித்துக் கொண்டார்.
எண்ணற்ற தலைவர்களின் ஆதர்சனத் தலைவராக விளங்கினார். இந்த உலகம் இருக்கும்வரை அவரே நவீன அஹிம்சையின் நாயகராகப் போற்றப்படுவார்.
உலகின் அமைதிக் காக்க அவரது சிலைகளும் புன்னகை ததும்பும் பொக்கைவாய்ப் புன்னகையும் அவரது சத்தியசோதனையின் வழிகாட்டலும் அறச்சிந்தனைகளும் என்றும் வழிகாட்டும். என்பதை இந்த அஹிம்சை நாளில்நாம் மீண்டுமொருமுறை நினைவுகூர்வோம்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
அறவழியில் போராடி சுதந்திரம் பெற்று அகிம்சையின் மகத்துவத்தையும், சிறப்பையும் உலகறியச் செய்த அண்ணல் காந்தியடிகளின் 152-வது பிறந்த தினத்தில் மகாத்மா அவர்களை போற்றி வணங்கி மகிழ்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.




