தீபாவளி நாளான நவம்பர் 4 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி நாளன்று தான் பொதுவாக மக்கள் அதிக அளவில் இறைச்சி வாங்குவது வழக்கம். எளிய மக்களும் அன்று தான் அதிகளவில் இறைச்சி வாங்கி உண்ணுவர்.
இந்நிலையில் நவம்பர் 4 ஆம் தேதி இறைச்சி கடைகளை மூட சென்னை மாநகராட்சியின் சில மண்டல அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.




